தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'மூன்று முதல்வர்களால் நிறைவேறிய திட்டம்'

'மூன்று முதல்வர்களால் நிறைவேறிய திட்டம்'

'மூன்று முதல்வர்களால் நிறைவேறிய திட்டம்'


ADDED : ஆக 19, 2024 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2024 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம் : 'மூன்று முதல்வர்களால் நிறைவேறிய திட்டம்' என, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர காரணமாக இருந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழு கூட்டமைப்பு மற்றும் களம் கண்ட அனைத்து போராளிகளுக்கும், விவசாயிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும், ஆதரவு கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும் நன்றி.

இத்திட்டத்தை செயல்படுத்த கோரி, மூன்று தலைமுறைகளாக, பல்வேறு வடிவங்களில், பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. போராட்டம் காரணமாக, இத்திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும் என உறுதியளித்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, நிதி ஒதுக்கிய பழனிசாமி, திட்டத்தை துவக்கி வைத்த ஸ்டாலின் என, மூன்று முதல்வர்களால் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் பணியாற்றிய அனைத்து பொறியாளர்களுக்கும் பாராட்டு. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us