ADDED : ஆக 19, 2024 02:58 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தர் குளம், 14 ஏக்கர் பரப்பு கொண்டது. நசியனுார் சிந்தன் குட்டை, கமலம் குளம், புது வலசு குளம், கருவில்பாறை வலசு குளம் போன்ற சிறு நீர்நிலைகளிலின் சிற்றோடை வழியாக வரும் நீர் கனிராவுத்தர் குளத்தில் கலக்கிறது.
பி.பெ.அக்ரஹாரம் மற்றும் பெரிய சேமூர், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீராதாரத்தில் குளம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆனால், நீர்வழித்தடங்கள் ஆங்காங்கே அடைபட்டும், ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தும், கனிராவுத்தர் குளத்தின் நீர்மட்டம் உயராமல், தண்ணீர் குறைந்து வருகிறது. தற்போது குளத்தில் ஆங்காங்கே பாறை திட்டுகள் தெரிகின்றன. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக, மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.