ADDED : ஜூலை 06, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் சின்னம்மா தலைமை வகித்தார். சத்துணவு சமூக தணிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நம்பியூர் யூனியன் அலுவலகம் முன், ஒன்றிய தலைவர் பூங்கோதை தலை-மையில், 50க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.