/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாத சுவாமி கோவிலில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கேமரா
/
குருநாத சுவாமி கோவிலில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கேமரா
குருநாத சுவாமி கோவிலில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கேமரா
குருநாத சுவாமி கோவிலில் ஏஐ., தொழில்நுட்பத்தில் கேமரா
ADDED : ஆக 10, 2024 07:45 AM
பவானி: அந்தியூர், குருநாத சுவாமி கோவிலில் காவல்துறை மூலம் பொருத்தப்பட்டுள்ள, 200க்கும் மேற்பட்ட கேராமக்களில், ஏஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குற்றங்களை கண்டறியவும், பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் போலீசார் கண்கா-ணித்து வருகின்றனர்.
அந்தியூர், புதுப்பாளையம் குருநாத சுவாமி கோவில் பண்டிகை தேரோட்டம் கடந்த புதன்கிழமை துவங்கி நடந்து வருகிறது. ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்-கானோர் வந்து செல்கின்றனர். தினமும், 70 ஆயிரத்துக்கும் அதிக-மானோர் கூடுவர் என்பதால்,
எஸ்.பி., அறிவுரைப்படி, பவானி டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூரில் இருந்து வந்துள்ள 'சாஸ்த்ரா' நிகர்-நிலை பல்கலைக்கழகம் மூலம், ஏஐ., தொழில்நுட்பத்தை, அந்தி-யூரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் பயன்படுத்தியுள்ளனர். பண்-டிகைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும், கூட்டத்தில் புகும் பழைய குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், வழிப்பறி, திருட்டு போன்ற அசம்பாவிதங்களை அறியவும், கேம-ராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமையன்று நடந்த தேர் திருவிழாவன்று, 65 ஆயிரம் பேர், நேற்று முன்தினம், 50 ஆயிரம் பேர் கோவிலுக்கு வந்துள்ளனர். வெள்ளிக்கிழமையான நேற்று, கோவிலுக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகம் பேர் வந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, 'சாஸ்த்ரா' நிகர்நிலை பல்கலைக்கழக துணை பேராசிரியர் ராஜன் கூறியதாவது; அந்தியூர் குருநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறியவும், கூட்-டத்தின் எண்ணிக்கையை கணக்கெடுக்கவும், அசம்பாவிதங்களை அறியவும், போலீசார் பொருத்தியுள்ள கேமராக்களில், ஏஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணித்து வருகிறோம்.
இதுவரை மூன்று பழைய குற்றவாளிகள், பண்டிகை கூட்-டத்தில் வந்து சென்றுள்ளனர். இதுகுறித்து, அந்தியூர் போலீசா-ருக்கு தகவல் கொடுத்துள்ளோம். மூன்று நாட்களில், இரண்டு லட்சம் பேர் கோவிலுக்கு வந்து சென்றுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.

