ADDED : ஆக 14, 2024 01:40 AM
ஈரோடு: மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு, சி.என்.கல்லுாரியில் நடந்த புத்தக திருவிழா, நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்றைய மாலை நேர அமர்வில், தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். இதில் விஞ்ஞானி ஏ.சிவதாணு-பிள்ளை பேசியதாவது: அறிவு படிக்கப் படிக்க வளர்ந்து கொண்டே போகும். செல்வம், பொருளை அழிக்கலாம்.
நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் வீட்டில் நுால்கள் இல்லை. நுாலகம் சென்றுதான் படிக்க முடியும். அப்படித்தான் படித்தேன். கற்றல் சிந்தனையை, அறிவை துாண்டும். 1958 ல் ரஷ்யா செயற்கை கோளை ஏவியது என படித்தது, எனது விஞ்-ஞான வாழ்க்கைக்கு துாண்டுகோலானது. இதுபற்றிய புத்தகங்-களை தேடிப்பிடித்து படித்தேன்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் சென்னை ராஜாஜிபு-ரத்தில் இருந்தபோது, 'என்னை புத்தகம் எழுதும்படி' கூறினார். பின், 'நாம் இருவரும் சேர்ந்து புத்தகம் எழுதுவோம்' என்றார். அவர் கூறியபடி எழுத துவங்கி இதுவரை, 11 புத்தகங்கள் எழுதி உள்ளேன். புத்தகங்கள் நமது அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்-துக்கும் தேவைப்படும். நாம் முன்னேறும்போது, இடையூறுகள் பல வரும். அதை எதிர் கொள்வதையும் புத்தகங்கள் எடுத்துக் கொடுக்கும். இணைய தளத்தில் எதை வேண்டுமானாலும் தேடிப்படிக்கலாம். ஆனால், மிக விரிவாக, தெளிவாக படிக்க புத்-தகங்கள்தான் தேவை.
தற்போது விண்வெளி ஆய்வில், நான்கு நாடுகள்தான் முன்னி-லையில் உள்ளன. அதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா என்றாகும். வரும், 2040ல் சந்திரனில் இந்தியா ஒரு இன்டஸ்டி-ரியை நிறுவ உள்ளது. அங்குள்ள 'ஹீலியம்-3'ஐ எடுத்து வரும்-போது இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி பெறும். 'ஹீலியம்-3'ல் இருந்து வெளிச்சம், வெப்பம் கிடைக்கும். யுரேனியமும், அதற்கு இணையானது. அது, இந்தியாவில் கிடைக்கவில்லை. உலக அளவில் தட்டுப்பாடு நிலவுகிறது. யுரேனியத்தைவிட ஹீலியம்-3, 100 மடங்கு சக்தி, பாதுகாப்பு அம்சம் கொண்டது. இந்த வாய்ப்பு கிடைக்கும்போது, நாம் மிகப்பெரிய வளர்ச்சியை காண்போம். அதே, 2040ல் விண்வெளிக்கு ஆட்கள் பயணம் செய்வார்கள். இவை அனைத்தும் நாம் கற்பதன் மூலமே சாத்திய-மாகும். அறிவு சார்ந்த நாடாக நாம் உருவாக, மிக எளிய வழி புத்-தகங்களை படிப்பதேயாகும். இவ்வாறு அவர் பேசினார். துணை தலைவர் விஜயராமலிங்கம் நன்றி கூறினார்.
சக்தி மசாலா தலைவர் துரைசாமி, எஸ்.பி., ஜவகர், சி.இ.ஓ., சம்-பத்து, சி.என்.கல்லுாரி முதல்வர் மனோகரன், மாவட்ட நுாலக அலுவலர் யுவராஜா, பெபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
