/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரும்பு தோட்டத்தில் குட்டியுடன் சிறுத்தை தஞ்சம் குள்ளவீராம்பாளையத்தில் மக்கள் 'திக்திக்'

ADDED : பிப் 22, 2025 05:13 AM
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே செலம்பூரம்மன் கோவில், கோவிலுார் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. ஒரு மாதத்துக்கு முன், எண்ணமங்கலம் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.
இரு நாட்களுக்கு முன், குள்ளவீராம்பாளையம் பகுதியில் தங்க-ராசு என்பவரது கரும்பு தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தெரி-யவே, அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மறுநாள் வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, கரும்பு தோட்டத்துக்கு உரமிட தங்கராசு சென்றார். அப்போது வரப்பில் குட்டியுடன் சிறுத்தை படுத்திருந்ததை கண்டு, உரத்தை அங்கேயே வீசிவிட்டு வீட்டுக்கு ஓட்டம் பிடித்தார். குட்டியுடன் கரும்புக் காட்டில் தஞ்ச-மடைந்துள்ள சிறுத்தையை பிடிக்க, அந்தியூர் வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.