/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மாவட்ட கூட்டம்
/
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மாவட்ட கூட்டம்
ADDED : ஆக 20, 2024 02:33 AM
ஈரோடு: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்க மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கலாவதி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணை செயலாளர் மலர்விழி சந்திரலேகா, மாவட்ட தலைவர் செந்தில்குமார், செல்வம், பாபு உட்பட பலர் பேசினர்.
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில், 3,000க்கும் மேற்பட்டோர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களாக பணி செய்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி செய்கின்றனர். கடந்த, 2018ல், 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க சுகாதாரத்துறை இயக்குனர் பரிந்துரைத்தும், நிறைவேற்றப்படவில்லை.
வெளி மாவட்டங்களில் பணி புரியும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி மாறுதல் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் நாளை காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவது, இதில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தில் இருந்து செல்லவும் முடிவு செய்தனர்.