/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை
/
ஈரோட்டில் தொடர்ந்து பல மணி நேரம் மின்தடை
UPDATED : ஜூலை 04, 2024 11:15 AM
ADDED : ஜூலை 04, 2024 08:41 AM
ஈரோடு : ஈரோடு மாநகர பகுதியில் முறையான பராமரிப்பு பணி இல்லாததாலும், போதிய பணியாளர்கள் இல்லாததாலும் தொடர் மின் தடை ஏற்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் லோக்சபா தேர்தல், பொது தேர்வுகளால் கடந்த மார்ச் முதல் மே முதல் வாரம் வரை மின்வாரியத்தில் பராமரிப்பு பணிகள் செய்யாமல், மின்சாரம் வழங்கினர். அதன்பின் தொடர்ந்து மின்தடை ஏற்படுத்தி பரா-மரிப்பு பணி செய்தனர். தேர்தலில் ஓட்டு எண்-ணிக்கை முடிந்து, 2 மாதங்கள் ஆன நிலை-யிலும், மின் பராமரிப்பு முழுமை பெறவில்லை. இதனால், மாவட்டம் முழுவதும் கடும் மின்தடை ஏற்படுகிறது.
குறிப்பாக, ஈரோடு மாநகர பகுதியில் கடுமை-யான மின்தடை உள்ளது. கடந்த திங்கள் அன்று இரவு, 11:00 முதல் காலை, 6:00 மணி வரை பஸ் ஸ்டாண்ட், அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை, எஸ்.கே.சி.,சாலை, ஈ.வி.என்., சாலைகளில் மின்சாரம் நிறுத்தப்-பட்டு, மக்கள் சிரமப்பட்டனர். அதன் பின்னர் கடந்த, 2 நாட்களாக இப்பகுதியில் அவ்வப்போது மின்தடை தொடர்ந்தது. நேற்று மாலை, 5:30 மணி முதல் இதே பகுதியில் மின்தடை ஏற்பட்டு இரவு, 8:00 மணியை கடந்தும் சீராகவில்லை. கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷத்துக்காக கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு ஜெனரேட்டர் பணி செய்-யாததால், மின் விளக்கு இன்றி பக்தர்கள் சிரமப்-பட்டனர்.
இதுபற்றி, மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறி-யதாவது: மின்வாரியத்தில் போதிய மின் கம்-பிகள், உபகரணங்கள் இல்லை. ஒயர்மேன் உட்-பட தொழிலாளர்கள் பற்றாக்குறையாலும், பழு-துகளை உடனுக்குடன் நீக்க இயலவில்லை. மேலும், புதைவட கேபிள் பதிப்பு பணி நிறைவு பெறாமலும், பல இடங்களில் அத்துடன் இணைப்பு வழங்குவதில் உள்ள சிரமத்தாலும், இதுபோன்ற பிரச்னைகள் தொடர்
கிறது. இவ்வாறு கூறினர்.