/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
/
காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 04, 2024 07:17 AM
சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் அருகே, இண்டியம்பாளையம் பஞ்., புதுகொத்-துக்காட்டில் சுகாதாரத்துறை சார்பில் அரசின் வருமுன் காப்போம் திட்டத்தில் காசநோய் ஒழிப்பு, புகையிலை, போதை பழக்க எதிர்ப்பு, பாதுகாப்பான குடிநீரின் அவசியம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். காசநோய் பரவும் விதம், அதன் வகைகள், ஆரம்ப அறிகுறி, சிகிச்சை, தடுப்பு முறை, புகையிலை பயன்-பாட்டின் தீமைகள், புற்று நோய் பாதிப்பு, சிகிச்சை முறை, பாது-காப்பான குடிநீர்,
வயிற்று போக்கு, ஓ.ஆர்.எஸ்., கரைசல் பயன்பாடு உட்பட பல்-வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினர். வட்டார மருத்-துவ அலுவலர் பிரபாவதி, மருத்துவ அலுவலர்கள் மைக்-கேல்ராஜ், தங்கமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முரு-கேசன், சாந்தி, பாலஜி உட்பட பலர் பங்கேற்றனர்.