ADDED : டிச 18, 2011 03:54 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: காங்கேயம், நீலக்காட்டுபுதூரில் சரவணன் என்பவரது, தேங்காய்
எண்ணெய் மில்லில் தீப்பிடித்ததில், நூற்றுக்கும் மேற்பட்ட கொப்பரை மூடைகள்
சேதமடைந்தன.
டிரையர் அதிக வெப்பமானதால், காய்ந்த கொப்பரையில்
தீப்பற்றியுள்ளது. காங்கேயம் தீயணைப்பு வீரர்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு
மேலாக போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் புகை
மூட்டமாக காணப்பபட்டது.
