ADDED : அக் 20, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்புலன்ஸில்
'குவாகுவா'
அந்தியூர், அக். 20-
பர்கூர்மலை பெரிய செங்குளத்தை சேர்ந்தவர் குமார், 29: இவர் மனைவி கங்கேஷ், ௨௭; நிறைமாத கர்ப்பிணியான கங்கேஷூக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின்படி சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ், அவரை ஏற்றிக்கொண்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தது. தாமரைக்கரை அருகே மணியாச்சிபள்ளம் என்ற இடத்தில், ஓடும் வாகனத்திலேயே வலி அதிகமாகி ஆண் குழந்தை பிறந்தது. பின் தாய், சேய் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.