நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி அருகே சிங்கம்பேட்டை, அலங்காரியூரை சேர்ந்த வியாபாரி கணேசனின் மகன் ஹரிஹர ஈஸ்வரன், 14; அரசு பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். நேற்று முன்தினம் வியாபார விஷயம் தொடர்பாக, கணேசன் அந்தியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டில் இருந்த மகனை காணவில்லை. நண்பர்கள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. மாயமான மகனை கண்டுபிடித்து தருமாறு, அம்மாபேட்டை போலீசில் புகாரளித்துள்ளார்.
* சித்தோடு, சாணார்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகள் லாவண்யா, 19; அரசு கல்லுாரி மாணவி. கடந்த, 8ம் தேதி கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. பழனிசாமி புகாரின்படி, சித்தோடு போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.