நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 25-
கோவை டி.ஐ.ஜி., சரவண சுந்தர், ஈரோடு எஸ்.பி., அலுவலக அமைச்சு பணியாளர் அலுவலகத்தில், நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டார். சமீபத்தில் அலுவலக ஊழியர் ஏழு பேர் இடமாற்றம் செய்யப்பட்டு, அலுவலர்களின் பணி புறக்கணிப்பால் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் டி.ஐ.ஜி., ஆய்வு மேற்கொண்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இரண்டு மணி நேர ஆய்வுக்கு பின் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை வளாகத்துக்கு சென்றார். அங்கும் ஆய்வு செய்தார்.

