நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளி மர்மச்சாவு
பவானி:திருப்பூர், சொக்கனுார், காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம், 45; ஜம்பையில் ஒரு ஆயில் மில்லில் தொழிலாளியாக வேலை செய்தார். வெள்ளித்திருப்பூர் அருகே வெடிக்காரன்பாளையம் பிரிவு அருகில் மர்மமான முறையில் நேற்று காலை இறந்து கிடந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், வெங்கடாச்சலமும், ஜம்பையில் உள்ள அவரது அக்கா மகனும், கடைசியாக ஒலகடம் டாஸ்மாக் கடையில் மது குடித்தது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

