ADDED : ஜன 12, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெக்ஸ்டைல்சில் தீ விபத்து
ஈரோடு,:ஈரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதியில் நாகராஜன் என்பவருக்கு சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் கரும்புகை வெளியேறியது. அப்பகுதி மக்களின் தகவலின்படி சென்ற ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் துணி, இயந்திரங்கள் கருகி சாம்பலானது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.