நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்பாபிஷேக விழா
பெருந்துறை : பெருந்துறை அடுத்த புங்கம்பாடியில், அறம் வளரும் மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக கும்பாபிஷேக நிகழ்வு கடந்த, 28ம் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. 30ம் தேதி முதற் கால யாக பூஜையை தொடர்ந்து, முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம், நேற்று காலை, 9:30 மணியளவில் நடந்தது. மாரியம்மன், விநாயகர், கருப்பணசாமி, கன்னிமார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.