ADDED : பிப் 05, 2025 01:20 AM
இறுதிக்கட்ட பயிற்சி
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓட்டுச்சாவடிகளில் பணி செய்யும் அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். தொகுதிக்கு உட்பட்ட, 237 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இறுதிக்கப்பட்ட பயிற்சியுடன், அவர்கள் எந்த ஓட்டுச்சாவடியில் பணி செய்ய வேண்டும், என்பதற்கான பணியாணை வழங்கப்பட்டது.
பின், அவர்களில், 20 மண்டல அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ஓட்டுச்சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை ஓட்டுச்சாவடிகளில் ஒப்படைக்கும் பணி விபரம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, வேட்பாளர், அவர்களது முகவர்களுக்கான கூட்டம் நடந்தது. கடைசி, 48 மணி நேரத்துக்கு முன், பின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பின், 4 பறக்கும் படை குழுவினர், 3 நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பணி விபரம் வழங்கப்பட்டது.