ADDED : பிப் 14, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழுநோய்கண்டறியும் முகாம்
அந்தியூர், :அந்தியூர் வட்டாரத்துக்கு உட்பட்ட அத்தாணி, சின்னத்தம்பிபாளையம், எண்ணமங்கலம், பர்கூர் மற்றும் ஓசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில், தொழுநோய் கண்டறியும் முகாம் நேற்று தொடங்கியது. வரும், 28ம் தேதி வரை நடக்கிறது. முகாமை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார். இதில் சுகாதார பணியாளர்கள், வீடு வீடாக சென்று, தொழுநோய் அறிகுறி குறித்தும் பரிசோதனை செய்தனர்.

