ADDED : மார் 19, 2025 01:41 AM
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 214 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 156.09 முதல், 166.78 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 10௮ ரூபாய் முதல், 159 ரூபாய் வரை, 7,886 கிலோ கொப்பரை, 11 லட்சத்து, 37,715 ரூபாய்க்கு விலை போனது.
* சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 957 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 51.91 ரூபாய் முதல், 57.79 ரூபாய் வரை, 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதே போல் தேங்காய் பருப்பு ஏலத்துக்கு இரண்டு மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 119 ரூபாய் முதல், 14௮ ரூபாய் வரை ஏலம் போனது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 2,444 தேங்காய் வரத்தாகி, ஒரு காய், 20 ரூபாய் முதல் 47 ரூபாய்; 20 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 136 ரூபாய் முதல் 162 ரூபாய்; 21 மூட்டை துவரை வரத்தாகி, கிலோ, 60 முதல் 73 ரூபாய்; மூன்று மூட்டை தட்டைபயறு வரத்தாகி கிலோ, 50 முதல் 71 ரூபாய்; 15 மூட்டை உளுந்து வரத்தாகி கிலோ, 80 ரூபாய்; ஒரு மூட்டை நரிப்பயறு வரத்தாகி கிலோ, 142 ரூபாய்; இரண்டு மூட்டை எள் வரத்தாகி கிலோ, 134 முதல் 137 ரூபாய்; நான்கு மூட்டை ஆமணக்கு வரத்தாகி கிலோ, 75 முதல் 82 ரூபாய் வரை விலை போனது.
* ஈரோட்டில் நேற்று நடந்த ஜவுளி வாரச்சந்தையில், தமிழகத்தின் பல்வேறு பகுதி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில மக்கள், வியாபாரிகள், கடைக்காரர்கள் ஜவுளி வாங்க வந்தனர். ரம்ஜான் பண்டிகைக்காக மொத்த மற்றும் சில்லறை ஜவுளி விற்பனை நடந்தது. குறிப்பாக கேரளா வியாபாரிகள், பொதுமக்கள் அதிகம் ஜவுளி வாங்கி சென்றனர். சில்லறை விற்பனை மட்டும் நன்றாக இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 1,550 மூட்டை பி.டி., ரக பருத்தி கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ, 76 ரூபாயிலிருந்து, 87 ரூபாய் வரை விற்பனையானது. 346 குவிண்டால் பருத்தி, 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.