/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குண்டர் சட்டத்தில்பெயின்டருக்கு சிறை
/
குண்டர் சட்டத்தில்பெயின்டருக்கு சிறை
ADDED : மார் 19, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டர் சட்டத்தில்பெயின்டருக்கு சிறை
ஈரோடு:ஈரோடு, ஆர்.என்.புதுார், சூரியம்பாளையம் விளையாட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பெயின்டர் கணேசன், 41; சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோவில் கடந்த பிப்., மாதம் கைது செய்து, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.இதை கலெக்டர் ஏற்றதால், கணேசன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.