ADDED : மார் 20, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் வெட்டைகண்டித்து மறியல்
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே, மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் அடுத்த, செண்பகபுதுார் அருகே உள்ள தங்கநகரம் பகுதி
யில், கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. நேற்று மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால், 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு செண்பகபுதுார் பஸ்ஸ்டாப்பில் கோவை செல்லும் சாலையில் இரவு, 8:55 மணி முதல் மறியலில் ஈடுபட்டனர். சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், மின்வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள், 9:15 மணியளவில் கலைந்து சென்றனர்.