/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெண் பயணிகளுக்குபோலீசார் விழிப்புணர்வு
/
பெண் பயணிகளுக்குபோலீசார் விழிப்புணர்வு
ADDED : மார் 22, 2025 01:15 AM
பெண் பயணிகளுக்குபோலீசார் விழிப்புணர்வு
ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் ரயில்வே மற்றும் இருப்புப்பாதை பாதுகாப்பு படையினர், காவலர்களுடன் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்காக, 'பெண் பயணிகள் பாதுகாப்புக்குழு' என்ற வாட்ஸ் ஆப் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ், நீதிமன்ற பெண் பணியாளர்கள், பெண்கள், குழந்தைகள் நலக்குழுவினர், பெண் டிக்கெட் பரிசோதகர், பெண் வி.ஏ.ஓ.,க்கள், கல்லுாரி மாணவியர், தேசிய மாணவர் படையினர், பெண் ரயில்வே ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். முழுக்க, முழுக்க ரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக இக்குழுவில் பகிரலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினர்.