sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்


ADDED : ஏப் 02, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் முல்லை ஒரு கிலோ பூ-1,340 ரூபாய்க்கு ஏலம்போனது. மல்லிகை-1,205, காக்கடா-1,100, செண்டுமல்லி- 96, கோழிகொண்டை-115, கனகாம்பரம்-560, சம்பங்கி-160, அரளி-180, துளசி-50, செவ்வந்தி-320 ரூபாய்க்கும் விற்பனையானது.

* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 448 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 168.30 முதல், 184.59 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 130.42 முதல், 175.89 ரூபாய் வரை, 19,299 கிலோ கொப்பரை தேங்காய், 31 லட்சத்து, 91,831 ரூபாய்க்கு விற்பனையானது.

*ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை ஜவுளி சந்தை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில மக்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் அதிகம் வந்தாலும், மொத்த ஜவுளி விற்பனை குறைவாகவே நடந்தது.

அதேசமயம் கோவில் விழா, முகூர்த்தம் போன்ற காரணத்தால் சில்லறை விற்பனை, 25 முதல், 30 சதவீதம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 ஆயிரம் கிலோ, தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 182.08 ரூபாய்; குறைந்தபட்சம், 96.89 ரூபாய் என, 49.90 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us