ADDED : ஏப் 03, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:ஈரோடு தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட கிளை செயலாளர் சந்திரமவுலி தலைமை வகித்தார். பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவிடம், ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக பேச சென்றபோது, அவர்களது மனுவை குப்பை தொட்டியில் வீசியதுடன், நிர்வாகிகள் மீது புகார் செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டார். மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் நடக்காத வண்ணம், வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத்தில் உள்ள, 10 தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

