ADDED : ஏப் 06, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
அந்தியூர்,அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் 9ம் தேதி நடக்கிறது. இதை தொடர்ந்து, 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை தேரோட்டம் நடக்கிறது. இந்நிலையில் பேரூராட்சி பகுதிகளில் ரோட்டோர கடை ஆக்கிரப்புகளை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில், அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு சரவணன் மேற்பார்வையில், ஆக்கிமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. பஸ் ஸ்டாண்டிலிருந்து தவிட்டுப்பாளையம் யூனியன் அலுவலகம் வரையிலும், சிங்கார வீதி, தேர் வீதி மற்றும் பர்கூர் ரோடுகளில், கடை மற்றும் வணிக நிறுவனங்களின் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

