ADDED : ஏப் 11, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாவீர் ஜெயந்திரத யாத்திரை
சேலம்:ஜெயின் சமூக குருவான பகவான் மகா வீரரின், 2,624ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி, சேலம், செவ்வாய்ப்பேட்டை ஆதிநாத் ஜெயின் கோவிலில் இருந்து, நேற்று ஊர்வலம் தொடங்கியது. உலக அமைதி, அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடந்த ஊர்வலத்தில், வெள்ளி ரதத்தில் மகாவீரர் சிலையை வைத்து புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியே சென்ற யாத்திரையில், வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், குழந்தைகள், கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை ஏந்திச்சென்றனர். அங்குள்ள ஜெயின் மருத்துவமனையில் யாத்திரை நிறைவடைந்தது.

