/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடியிருப்பை சூழ்ந்தகரும்புகையால் பீதி
/
குடியிருப்பை சூழ்ந்தகரும்புகையால் பீதி
ADDED : ஏப் 15, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியிருப்பை சூழ்ந்தகரும்புகையால் பீதி
ஈரோடு:ஈரோடு கனிராவுத்தர் குளம் பச்சப்பாளி மேடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், காந்தி நகர் பகுதி மக்கள் குப்பை கொட்டுவது வழக்கம். தற்போது மலைபோல் குப்பை தேங்கியுள்ளது.
நேற்று மதியம் குப்பையில் இருந்து கரும்புகை வந்தது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ மற்றும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் குடியிருப்புவாசிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.