தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சகோதரியை தாக்கிய சகோதரி

சகோதரியை தாக்கிய சகோதரி

சகோதரியை தாக்கிய சகோதரி


ADDED : ஜூன் 25, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், தாராபுரம், காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேபி ராஜம், 53; இவரது தாயார் மாரியம்மாள், 70; கணவர் இறந்தபின் பென்சனை வாங்கி, அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்.

பழனி அருகே உள்ள மகள் தங்கத்தாய் வீட்டில் இருந்தவர், இரு தினங்களுக்கு முன், தாராபுரத்தில் உள்ள மற்றொரு மகளான பேபி ராஜம் வீட்டுக்கு வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கத்தாய், அவரது மகன் சதீஷ் மற்றும் சுரேஷ் அவரது மனைவி கலையரசி ஆகியோர், பேபி ராஜம் வீட்டுக்கு வந்தனர்.

தாயாரிடம் பென்சனை வாங்க திட்டமிடுகிறாயா? என கேட்டு தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி, நான்கு பேர் மீதும் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us