நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம் அடுத்த பகவான் கோவிலை சேர்ந்தவர் விஜயகுமார், 35; லாரி டிரைவர். கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு ரங்கம்பாளையத்தில் இறக்க சென்றார்
. நேற்று காலை, 9:00 மணியளவில், ரங்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரியில் தீப்பிடித்தது. பிற வாகன ஓட்டிகள் பார்த்து எச்சரிக்க, லாரியை நிறுத்தி பார்த்தார். அப்போது வைக்கோலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கல் தீயை அணைத்தனர். ஆனாலும் வைக்கோல் முற்றிலும் எரிந்து சாம்பலானது. லாரியும் பெரிய அளவில் சேதமானது.