நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூரை அடுத்த வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 58; அந்தியூர் எஸ்.பி.ஐ., கிளை கிளார்க். பக்கவாதம், இதய பிரச்னைக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். நேற்று அதிகாலை கழிவரை சென்றவர் விழுந்து மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.