/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 07, 2025 01:36 AM
ஈரோடு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், மாவட்ட செயலர் மாரிமுத்து தலைமையில், ஈரோடு சூரம்பட்டிவலசில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை தலைவர்கள் மதியழகன், செந்தில்குமார், முத்துகிருஷ்ணன் கோரிக்கை குறித்து பேசினர்.
ஊதிய உயர்வு வெளிப்படை தன்மையுடன் சங்கங்களுக்கு வகைப்பாடு செய்யாமல், நஷ்டங்களை கணக்கில் கொள்ளாமல், பணியாளர் பெற்ற சம்பளத்தில், 20 சதவீதம் ஊதிய உயர்வு நிபந்தனையின்றி வழங்க வேண்டும். ஓய்வு பணியாளர்களுக்கு நிதி பயன்கள் வழங்காத சங்கங்கள், நிதி முறைகேடுகளுக்கு உள்ளான சங்கங்கள், தணிக்கை முடிக்கப்படாத சங்கங்களுக்கு ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
பிற காரணங்களுக்காக ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்க வேண்டும். சங்கங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் விவசாய உபகரணங்கள், வாகனங்கள், தேவையற்ற கட்டடங்கள் உள்ளிட்ட திட்டங்களின் காரணமாக ஏற்படும் இழப்புகள் அரசால் ஈடு செய்யப்பட வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பின், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.