நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் செல்லும் வழி, காளிங்கராயன் இல்லத்தில் தங்கும் இடம், அரசு நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள், ஜெயராமபுரத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் அரங்கம், ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை நினைவகம், சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட், ஆவின் பால் பண்ணை வளாகம், சித்தோடு திருமண மண்டப பகுதிகளில் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் (டிரோன்) பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கலெக்டர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

