/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எழுத்தாளர்களின் படைப்புக்கு நிதியுதவி
/
எழுத்தாளர்களின் படைப்புக்கு நிதியுதவி
ADDED : நவ 27, 2025 02:08 AM
ஈரோடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம், இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
இச்சங்கம் மூலம், 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் நிதியுதவியை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்கள், ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில் விண்ணப்பத்தை பெறலாம். https://www.tn.gov.in/form என்ற இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். ஈரோடு கலெக்டர் அலுவலகம், கூடுதல் கட்டடம், 4 வது தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கூடுதல் விபரம் பெறலாம்.

