ADDED : நவ 28, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம், பங்களாபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் ௨ பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த, 83 மாணவ, மாணவியருக்கு, பங்களாபுதுார்
மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், 2.25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை நேற்று வழங்கப்
பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் முருகேசன், தலைவர் செல்வநாயகம் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

