ADDED : பிப் 06, 2026 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆசிரியர் மற்றும்
அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக்குழு, ஆக்டோ-ஜியோ சார்பில்,
ஈரோடு தாலுகா அலுவலகம் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கண்ணன், பிற சங்க நிர்வாகிகள்
ரமேஷ், வெங்கிடு, சாமிகுணம், உஷாராணி, ரங்கராஜ் உள்பல பலர் கலந்து
கொண்டனர். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி சி.பி.எஸ்., திட்டத்தை
ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

