ADDED : மார் 24, 2026 05:45 AM
ஈரோடுஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் வரும் ஏப்., 23ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிக்கு, சுழற்சி முறையில் நேற்று ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் கந்தசாமி தலைமையில், 2,379 ஓட்டுச்சாவடிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட் - பி.யூ.,), கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்-சி.யூ.,), வி.வி.பேட், தேர்தல் ஆணைய இணைய தளம் மூலம், முதற்கட்ட சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 310 சி.யூ., 310 பி.யூ., 336 வி.வி.பேட்; ஈரோடு மேற்கு, 390-390-422; மொடக்குறிச்சிக்கு, 348- 348-377; பெருந்துறைக்கு, 350-350-379; பவானிக்கு, 367-367-397; அந்தியூருக்கு, 325-325-352; கோபிக்கு, 370-370-401; பவானிசாகருக்கு, 392-392-425 என மொத்தம், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (கன்ட்ரோல் யூனிட்-சி.யூ.); 2,852 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட் - பி.யூ.,); 3,089 வி.வி.பேட் ஒதுக்கப்பட்டது. இன்று காலை முதல் அந்தந்த சட்டசபை தொகுதிக்கு, இவை அனுப்பி வைக்கப்படும்.
