ADDED : மே 15, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
ஈரோடு::ஈரோடு மக்கள் ஆட்டோ சார்பில், மே தின விழா ஊர்வலம், ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இருந்து நேற்று நடந்தது. நலச்சங்க தலைவர் அப்துல் ரஹீம் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., முத்துகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
தொழிலாளர்கள் ஒற்றுமை உயர வேண்டும். மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும், என பல்வேறு வலியுறுத்தல்களை தெரிவித்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா வரை ஊர்வலமாக வந்து, அங்குள்ள தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
