ADDED : மே 26, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி அருகேயுள்ள மைலம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2012ல் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், 100க்கும் மேற்பட்டோர், பள்ளியில் நேற்று சந்தித்து கொண்டனர். தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.
தமிழாசிரியை பங்கஜவல்லியும் இதில் பங்கேற்றார். அவரும் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பாடம் நடத்தும்போது, உன்னை அறிந்தால், உன்னை அறிந்தால் பாட்டை பாடி உற்சாகப்படுத்துவார். அதே பாட்டை மீண்டும் பாடுமாறு மாணவர்கள் வலியுறுத்தி, மைக்கில் பாட, அவர் உள்ளிட்ட அனைவரும் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.
