ADDED : மே 27, 2026 04:21 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, மேற்கு மண்டல ஐ.ஜி., மற்றும் கோவை சரக டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளனர்.
இதன்படி ஈரோடு டவுன் ராஜேஸ்வரி, திருப்பூர் மாநகர்; சூரம்பட்டி அர்ஜூன் குமார் கோவை டவுன்; கருங்கல்பாளையம் கந்தசாமி கோவை டவுன்; கொடுமுடி ஜெகநாதன் கோவை டவுனுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
தொண்டாமுத்துார் சண்முகவேலு அந்தியூர்; அந்தியூர் செந்தில்குமார் காமநாயக்கன்பாளையம்; பொள்ளாச்சி கிழக்கு தெய்வராணி சத்தி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்; இங்கிருந்த சரஸ்வதி திருப்பூர் மாவட்டம் செய்யூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோத்தகிரி செந்தில் பிரபு கொடுமுடி; ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்ன காமணன் பொள்ளாச்சி கிழக்கு; பெருமாநல்லுார் சரவணன் ஈரோடு வீரப்பன்சத்திரம்; பவானி நவநீத கிருஷ்ணன் கருமத்தம்பட்டி; ஈரோடு தாலுகா சரவணன் பவானிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளகோவில் ஞான பிரகாசம் ஈரோடு தாலுகா; மேட்டுப்பாளையம் மணிகண்டன் கருங்கல்பாளையம்; புளியம்பட்டி ஞானசேகரன் மேட்டுப்பாளையம்; தாளவாடி ராதா கிருஷ்ணன் புளியம்பட்டி; கோபி அரவிந்தராஜன் தாளவாடி; திருப்பூர் மதுவிலக்கு தமிழரசு கோபி; நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் வைரம் சத்தியமங்கலம்; இங்கிருந்த இளங்கோ ஈரோடு டவுனுக்கும் மாற்றுப்பட்டுள்ளனர்.
தேவாலா செந்தில்குமார் கடத்துார்; குன்னுார் விஜயன் ஈரோடு மாவட்ட குற்றபதிவேடு ஆவண காப்பகம்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள தேவி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு; ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு முத்துபாண்டி உடுமலை குற்றப்பிரிவு; ஊட்டி டவுன் அனுராதா ஈரோடு சூரம்பட்டி; என்.எஸ்.டி., பிரிவு கதிர்வேல் அப்பர் குன்னுார்; இங்கிருந்த சக்திவேல் என்.எஸ்.டி. பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். காங்கேயம் அனைத்து மகளிர் கோமதி பவானி; இங்கிருந்த சுமதி தடாகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மசினகுடி சுப்புரத்தினம் ஆசனுார்; இங்கிருந்த வெங்கடேசன் பேரூர் மதுவிலக்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் பலரும், அடுத்த மாத துவக்கத்தில் பணியிடத்தில் சேரவிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
