ADDED : ஆக 03, 2026 06:08 AM
அவிநாசி:திருப்பூர்
மாவட்டம் அவிநாசி அருகே விற்பனைக்காக கஞ்சா மற்றும் உயர்ரக போதைப்
பொருட்களை பதுக்கி வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த நவ்ஷத் அலி, 39
என்பவரை அவிநாசி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
அவிநாசிலிங்கம்பாளையம்
பகுதியில் வசித்து, மங்கலம் சாலை ரவுண்டானா அருகே உள்ள பேக்கரியில்
பணியாற்றி வந்த நவ்ஷத் அலியிடம், ரகசிய தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர்
கார்த்திக் தங்கம் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது,
விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1 கிலோ கஞ்சா, 4 எம்.டி.எம்.ஏ.
மாத்திரைகள், 2 நைட்ராசெபம் மாத்திரைகள் மற்றும் கால் கிராம்
மெத்தாபெட்டமைன் பவுடர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து
நவ்ஷத் அலியை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள்
குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
