sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கூடுதுறையில் குளியலறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

கூடுதுறையில் குளியலறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

கூடுதுறையில் குளியலறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு


ADDED : பிப் 21, 2025 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:52 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கூடுதுறையில் குளியலறைரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

பவானி:பவானி கூடுதுறையில், குளியலறையுடன் கூடிய கழிப்பறை அமைக்க, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரசித்த பெற்ற பவானி கூடுதுறைக்கு, விசேஷ தினங்களில் பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்ய வருவர். குறிப்பாக ஆடி, தை அமாவாசை தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, திதி, தர்ப்பணம் கொடுத்து, புனித நீராடி தரிசனம் செய்வர். பக்தர்களின் வசதிக்காக குறைந்த அளவில் குளியலறை மற்றும் கழிப்பறை தனித்தனியே உள்ள நிலையில், பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி, கூடுதலாக குளியலறையுடன் கூடிய கழிப்பறை அமைத்து தர வேண்டும் என, கடந்த மாதம் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.

இதையடுத்து கோரிக்கையை ஏற்ற அரசு, புதிய குளியலறையுடன் கூடிய கழிப்பறை அமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர், கூடுதுறையில் ஆய்வு செய்து விரைவில் பணி துவங்குவர் என, நகர்மன்ற தலைவர் சிந்துாரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us