/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்டவிரோதமாக விற்பனை 177 மதுபாட்டில் பறிமுதல்
/
சட்டவிரோதமாக விற்பனை 177 மதுபாட்டில் பறிமுதல்
ADDED : நவ 20, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, நஅத்தாணி வாரச்சந்தை பஸ் ஸ்டாப் அருகே, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு சந்து கடையில், மது விற்பனை செய்யப்படுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில்
சோதனை செய்த போது, நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மாரியப்பன், 34, மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, 177 மது பாட்டில்கள், 16,500 ரூபாய் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

