/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி பாசனத்தில்2ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்
/
கீழ்பவானி பாசனத்தில்2ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்
ADDED : பிப் 21, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழ்பவானி பாசனத்தில்2ம் சுற்று தண்ணீர் நிறுத்தம்
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு, கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஜன., 10ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் ஐந்து சுற்றுக்களாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் சுற்று தண்ணீர் நேற்று காலை முதல் முற்றிலும்
நிறுத்தப்பட்டது.நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 88.42 அடி, நீர் இருப்பு, 20.5 டி.எம்.சி.,யாக இருந்தது. நீர்வரத்து, 927 கன அடியாக இருந்தது. மூன்றாவது சுற்றுக்கு மார்ச், ௩ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும்.

