/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முந்த முயன்றபோது விபத்து2 டிரைவர்கள் பலத்த காயம்
/
முந்த முயன்றபோது விபத்து2 டிரைவர்கள் பலத்த காயம்
ADDED : ஏப் 04, 2025 01:24 AM
முந்த முயன்றபோது விபத்து2 டிரைவர்கள் பலத்த காயம்
பவானி மேட்டூரிலிருந்து சாம்பல் ஏற்றிய லாரி பவானி நோக்கி நேற்று காலை சென்றது. மேட்டூர், மூலக்காட்டை சேர்ந்த ஜானகிராமன், 44, ஓட்டி வந்தார். சிங்கம்பேட்டையை அடுத்த சொட்டையனுார் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம் முந்தியபோது, எதிர்பாராதவிதமாக லாரியின் பக்கவாட்டில் மோதி, எதிரில் வாழைத்தார் ஏற்றி வந்த பிக்-அப் வேன் மீது நேருக்குநேர் மோதியது. இதில் இரு வாகனங்களும் சேதமடைந்தன.
டாடா ஏஸ் டிரைவரான திருவண்ணாமலை, போரூரை சேர்ந்த முருகன், 45; வாழைத்தார் ஏற்றி வந்த வேன் டிரைவரான சென்னம்பட்டி, ஜரத்தலை சேர்ந்த சிவசங்கர், 28, படுகாயம் அடைந்தனர். சாம்பல் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

