/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களில்24 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை துவக்கம்

ADDED : ஏப் 16, 2025 01:09 AM
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களில்24 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை துவக்கம்
கோபி:கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து, 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது.
இரு பாசனங்களுக்கும் கடந்த, 2024 டிச.,11 முதல், கடந்த, 9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் இரு பாசனங்களிலும், கோ-51, எல்.எல்.ஆர்., டி.பி.எஸ்.,-5, ஏ.டி.டீ.,38 மற்றும் ஏ.எஸ்.டி., 16 ரக நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது இரு பாசனங்களிலும்
அறுவடை தொடங்கி நடந்து வருகிறது. பூஞ்சான் நோய் தாக்குதலால், மகசூல் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறியதாவது: இரண்டாம் போகமாக நெல் நடவு செய்தது முதல், பனிப்பொழிவின் தாக்கம், அதையடுத்து பெய்த மழையால் விளைச்சல் பாதித்தது. முதல் போகம் எப்போதும் மழைக்காலமாக இருக்கும், இரண்டாம்போகம் வெயில் காலமாக இருக்கும். ஆனால் நடப்பு இரண்டாம் போகத்தில், பருவம் தவறிய மழை மற்றும் இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாததால் மகசூல் பாதித்துள்ளது.
எப்போதும் இல்லாத வகையில், தற்போது சித்திரை மாதத்தில் மழை பொழிவு உள்ளது. இதனால் அறுவடைக்கான நெற்பயிரில் பரவலாக பூஞ்சான் நோய் தாக்கியுள்ளது.
முன்பு ஏக்கருக்கு மூன்று டன் நெல் மகசூல் கிடைக்கும். பூஞ்சான் நோய் தாக்குதலால், இரண்டரை டன் நெல்
மட்டுமே கிடைத்துள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.