/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் நகராட்சியில்27 தீர்மானம் நிறைவேற்றம்
/
காங்கேயம் நகராட்சியில்27 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஜன 29, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம் நகராட்சியில்27 தீர்மானம் நிறைவேற்றம்
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரிய பிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், நகராட்சி துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி மைய பராமரிப்பு பணிகளுக்கு, ரூ.7.40 லட்சம், ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பழுது நீக்க, ரூ.4.50 லட்சம், தெரு விளக்கு பராமரிக்க, ரூ.10 லட்சம், அலுவலக பயன்பாட்டிற்கு புதிய பிரிண்டர் வாங்க, ரூ.2 லட்சம், 18 வார்டுகளில் களைக்கொல்லி மருந்து அடிக்க, ரூ.12 லட்சம் ரூபாய் என, ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 27 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.