/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெல்லம் விலையில்மூட்டைக்கு ரூ.30 சரிவு
/
வெல்லம் விலையில்மூட்டைக்கு ரூ.30 சரிவு
ADDED : மார் 30, 2025 01:11 AM
வெல்லம் விலையில்மூட்டைக்கு ரூ.30 சரிவு
ஈரோடு:ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட நாட்டு சர்க்கரை, 2,100 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,250 முதல், 1,360 ரூபாய் வரை விற்பனையானது.
உருண்டை வெல்லம், 2,400 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,280 முதல், 1,380 ரூபாய் வரை விற்பனையானது.அச்சு வெல்லம், 300 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 முதல், 1,420 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தைவிட வெல்லம், நாட்டு சர்க்கரை வரத்து குறைந்து இருந்தது. நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்தும், உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் ஆகியவை மூட்டைக்கு, 30 ரூபாய் குறைந்தும் காணப்பட்டது.