ADDED : ஏப் 12, 2025 01:31 AM
அ நிறம் | அளவு
தே.பருப்பு, நிலக்கடலை ரூ.3.08 லட்சத்துக்கு ஏலம்
கோபி, கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில், ஒரு கிலோ, 176 ரூபாய் முதல் 188 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தான, 1,827 கிலோ தேங்காய் பருப்பு, 2.82 லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் நிலக்கடலை ஏலத்தில், ஒரு கிலோ, 50 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை, 457 கிலோ நிலக்கடலை, 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 43 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 150 முதல், 17௪ ரூபாய்; இரண்டாம் தரம், 110.29 முதல், 148.09 ரூபாய் வரை, 773 கிலோ கொப்பரை, 1.௨௦ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
