sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு35 கடை, நிறுவனங்கள் மீது நடவடிக்கை

/

தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு35 கடை, நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு35 கடை, நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு35 கடை, நிறுவனங்கள் மீது நடவடிக்கை


ADDED : ஏப் 03, 2025 01:47 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு35 கடை, நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஈரோடு:ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் கடந்த மார்ச் மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

எடையளவுகள், தயாரிப்பாளர், விற்பனையாளர், பழுது பார்ப்பவர்களின் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். முத்திரையிடப்படாத எடையளவு, உரிமம் புதுப்பிக்காதது, சரிபார்ப்பு சான்று தெரியும் படி வைக்காதது, சோதனை எடைக்கற்கள் பராமரிப்பு போன்றவற்றை உறுதி செய்தனர்.

இவ்வாறாக, 154 கடைகளில் நடந்த ஆய்வில், 28 கடைகளில் முரண்பாடும், பொட்டல பொருட்களின் விதிகளின் கீழ், 29 கடைகளில் நடந்த ஆய்வில், 7 கடைகளிலும் முரண்பாடு கண்டறியப்பட்டது. குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர்கள், கொத்தடிமை ஒழிப்பு, குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் சட்டப்படி, 59 தோட்டங்கள், விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் நடக்கும் இடங்களில் நடந்த ஆய்வில் முரண்பாடு காணப்படவில்லை.

முரண்பாடு கண்டறியப்பட்ட கடைகள், நிறுவனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர். குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தினால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, நிறுவன உரிமையாளர் மீது, 20,000 முதல், 50,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் முதல், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்க நேரிடும் என எச்சரித்தனர்.

குழந்தை தொழிலாளர் குறித்த புகாரை, 1098, 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என, கேட்டு கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us