/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவிலில் 5 நாளில்ரூ.46.50 லட்சம் காணிக்கை
/
பண்ணாரி கோவிலில் 5 நாளில்ரூ.46.50 லட்சம் காணிக்கை
ADDED : ஏப் 16, 2025 01:08 AM
பண்ணாரி கோவிலில் 5 நாளில்ரூ.46.50 லட்சம் காணிக்கை
சத்தியமங்கலம். :சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில், 20 உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு தீ மிதி விழாவை தொடர்ந்து மறுநாள், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் 1.02 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 217 கிராம் தங்கம், 839 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மறுபூஜை நடந்தது. நேற்று மீண்டும் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.
இதில், 46.50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 57 கிராம் தங்கம், 479 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. அதாவது ஐந்து நாளில், 46.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

